• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினிகாந்த் வந்தவுடன் அனைத்துக் கட்சி கூடாரங்களும் காலியாகி விடும் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் வந்தவுடன் அனைத்துக் கட்சி கூடாரங்களும் காலியாகி விடும் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் - அர்ஜுன் சம்பத்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் அனைத்துக் கட்சி கூடாரங்களும் காலியாகி விடும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் ஆன்மீக அரசியல் எழுச்சி பெறுகின்ற சூழல் இன்று இருக்கிறது. 2021  சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தேர்தல் பணிக்குழுக்களை அமைத்து வருகிறோம். நிச்சயமாக ஆன்மீக அரசியல் தான் 234 தொகுதியிலும் வெற்றி பெறும். திராவிட அரசியல் முடிவுக்கு வரும்.

    ரஜினிகாந்த் ஏற்கெனவே அரசியலில் தான் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அறிவிப்பார். ரஜினி வழி தனி வழி. பாரதிய ஜனதா கட்சியுடன் இணைய வேண்டிய அவசியம் ரஜினிக்கு இல்லை. ரஜினிக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. அவர் வந்தால் அனைத்துக் கட்சிக் கூடாரங்களும் காலியாகி விடும். அவர் தான் ஜெயிப்பார்.



    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தவே திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். தமிழக முதல்வர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: