ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொண்டால் கமல்ஹாசனை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், “தமிழகத்தில் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக வணிக நோக்கத்தில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு ஆழ்துளை கிணறு ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். ஆழ்துளைக் கிணற்றில் நீர் மணி பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வருக்கு மனு அளிக்க உள்ளோம்.
வருகிற 2021 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வரக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆட்சியை கைப்பற்றுவது என்பது இந்து மக்கள் கட்சி நோக்கமல்ல. ஆன்மீக அரசியல் கோலேற்றுவதுதான் நோக்கம்.
ரஜினிகாந்தை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்களை ஓரணியாக திரட்டுவோம். இதை ஏற்றுக்கொண்டு கமல் வந்தால் நிச்சயமாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.