ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் - இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் - இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறினார். மேலும், குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறினார். மேலும், குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது என்று அறிவித்தார்.

  சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் கிளப்பில், அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூட்டம் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்குவந்து விசாரணை நடத்தினர். இதனால் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

  இது குறித்து அர்ஜூன் சம்பத் கூறுகையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளது. இந்து மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். குறிப்பாக பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவோம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.

  திமுக தேர்தல் அறிக்கையில் இந்துக்களுக்கு சலுகைகள் என இரட்டை வேடம் பேடுகிறது, கபட நாடகம் ஆடுகிறது. இந்த தேர்தலில் எங்களுடைய முக்கிய குறிக்கோள் இந்து வாக்கு வங்கியை ஒன்றிணைப்பது.

  இந்து மக்கள் கட்சி பாஜக வேட்பாளர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன். தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்று ஒரு சில தினங்களில் இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

  அதனைத் தொடர்ந்து, இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அர்ஜூன் சம்பத் வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஒரு குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம்.

  மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்று பெயர் சூட்டப்படும். ராமேஸ்வரம் புனிததீவாக அறிவிக்கப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

  Published by:Suresh V
  First published:

  Tags: Arjun Sampath, Hindu Makkal Katchi, TN Assembly Election 2021