ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம் - அர்ஜூன் சம்பத் சவால்

தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம் - அர்ஜூன் சம்பத் சவால்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

தமிழ்நாட்டில் தடையை மீறி விநாயகர் சிலைகளை வைப்போம் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை என்பது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் என்றும் தடையை மீறி சிலை வைப்போம் என்றும் இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

  கோவை அன்னூரை சேர்ந்த விவசாயி கோபால் சாமி மீது போடப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வலியிறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுல் பங்கேற்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

  அப்போது பேசிய அவர், கோவை அன்னூரில் விவசாயிகளுக்கு எதிராக பி.சி.ஆர் சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுகிறது. கோபால் சாமி விவகாரத்தில் உண்மை வெளி வந்துவிட்டது. முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயி கோபால் சாமியை சந்தித்து இருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் கோபால் சாமி மீது வழக்கு போட்ட நீங்கள், உண்மை தெரிந்தவுடன் ஏன் அவர் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெறவில்லை என்றார்.

  பி.சி.ஆர் சட்டம் அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒருதலைபட்சமாக அரசு தடை விதித்துள்ளது. விநாயகர் சிலை வைப்பதால் கொரோனா பரவும் என்பது ஏற்புடையது அல்ல எனவும் இந்து சமய தலைவர்களை ஒழுங்குபடுத்தி, விநாயகர் விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றார்.

  விநாயகர் விழா தடை என்பது வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் என்றார். இது தொடர்பாக வரும் 6 ஆம் தேதி இந்து மக்கள் கட்சி மாநிலம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த போவதாகவும், 10 ஆம் தேதி தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் செய்வோம் என்றார். டாஸ்மார்க் கடையில் கூட்டம் கூடினால் கொரோனா வரவில்லையா? என்றவர் கோயில்களை திறப்பதால் கொரோனா ஓடிவிடும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கோயிலில் செய்யும் யாகங்கள், மந்திரங்கள் கொரோனாவை விரட்டி அடிக்கும். கோயில்களில் மருத்துவ முகாம்களை நடத்துங்கள். கோயில்கள் திறந்திருந்தால் நல்லது என்றார். மேலும், கே.டி.ராகவன் விவகாரம் குறித்து பேசிய அவர் ராகவனை திட்டமிட்டு சதிவலையில் சிக்க வைத்துள்ளதாக கூறினார்

  Published by:Karthick S
  First published:

  Tags: Arjun Sampath, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி