நடிகர் ரஜினி தொடங்கும் கட்சியுடன் இணைந்து இந்து மக்கள் கட்சி பணியாற்றும்.. அர்ஜூன் சம்பத்..

நடிகர் ரஜினி தொடங்கும் கட்சியுடன் இணைந்து இந்து மக்கள் கட்சி பணியாற்றும்.. அர்ஜூன் சம்பத்..

ரஜினிகாந்த் - அர்ஜுன் சம்பத்

ரஜினியை பி.ஜே.பி யின் "பி " டீம் என்றும் சாதி, மத சாயங்கள் பூசியும் அரசியல் சாயம் பூசுவதை முறியடித்து ரஜினி மக்களை ஈர்ப்பார் எனவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த் துவங்கும் ஆன்மீக அரசியல் கொள்கை கொண்ட கட்சியுடன், இந்து மக்கள் கட்சி உடனிருந்து பணியாற்றும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் கோவை சலீவன் வீதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் இன்று மாலை வழிபட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினியின் இன்றைய அறிவிப்பு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருப்பதாக தெரிவித்தார். திமுக அதிமுக போன்ற கட்சிகளுக்கு வாக்களித்து சலித்துப்போன மக்களுக்கு ஆன்மீக அரசியலை கொடுப்பேன் என ரஜினி சொல்லி இருக்கின்றார் என தெரிவித்தார்.

Also read... தஞ்சை பெரியகோவில் நிகழ்வுக்கு பின்னரும் பாடம் கற்கவில்லையா? - தமிழில் குடமுழுக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..உயிரை பணயம் வைத்து என்ற வார்த்தையை ரஜினி பயன்படுத்தி இருப்பது வருத்தத்தினை ஏற்படுத்துகிறது என்றும், இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில் வந்து அரசியல் பேச துணிச்சல் வேண்டும் எனவும் அதை ரஜினி செய்து இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

ரஜினியை பாஜகவின் "பி " டீம் என்றும் சாதி, மத சாயங்கள் பூசியும் அரசியல் சாயம் பூசுவதை முறியடித்து ரஜினி மக்களை ஈர்ப்பார் எனவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். ரஜினிகாந்த் துவங்கும் ஆன்மீக அரசியல் கொள்கை கொண்ட கட்சியுடன், இந்து மக்கள் கட்சி உடனிருந்து பணியாற்றும் எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published: