ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணா, கருணாநிதி வழியில்லாமல் பெரியார், கம்யூனிஸ்ட் வழியில் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் - அர்ஜூன் சம்பத் விமர்சனம்

அண்ணா, கருணாநிதி வழியில்லாமல் பெரியார், கம்யூனிஸ்ட் வழியில் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் - அர்ஜூன் சம்பத் விமர்சனம்

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

திமுக ஆட்சியை அண்ணா, கருணாநிதி வழியில் நடத்தலாம். ஆனால் மு.க.ஸ்டாலின் ஆட்சி கம்யூனிஸ்ட், பெரியார், நக்சல் வழியில் செல்கிறது என்று அர்ஜுன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘திமுக ஓராண்டு சாதனை விளம்பரம் செய்து வருகிறார்கள். திமுக திராவிட மாடல் ஆட்சி சாதனை இல்லை, வேதனை மற்றும் சோதனை தான் என்றார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளதாதால் இந்தியாவிலேயே அதிக உயிரிழப்பு தமிழகத்தில் நேர்ந்துள்ளது. மழை, வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. அரசை விமர்சனம் செய்ததற்காக மாரிதாஸ், கல்யாண ராமன் குண்டர் தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட திமுக நிறைவேற்றவில்லை. என்றும் பாலியல் துன்புறுத்தல், குற்றங்கள் அதிகரித்துள்ளது. திமுக வந்தவுடன் மின் வெட்டிற்கு அணில்கள் ஓட ஆரம்பித்துவிட்டன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘திமுக தொடர்ந்து பிரிவினைவாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. சட்டமன்ற நேரத்தை வீணாக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி வருகிறது திமுக. மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டமாக திமுக காட்டிக்கொள்கிறது. மாணவர்கள் கையில் கயிறு கட்டுவதற்கு ஆதரவு தரதேவை இல்லை. சாதி, மத அடையாளங்களாக அவற்றை பார்க்க வேண்டாம். பள்ளிகளில் சீருடைகள் மட்டுமே ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஷவர்மாவை தடை செய்ய முடிவு? என்ன சொல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுக ஆட்சியை அண்ணா, கருணாநிதி வழியில் நடத்தலாம், ஆனால் ஸ்டாலின் ஆட்சி கம்யூனிஸ்ட், பெரியார், நக்சல் வழியில் செல்கிறது. கருணாநிதியின் திராவிட மாடலில் மாற்று கருத்து உண்டு என்றும் ஓராண்டு வேதனை, சோதனையை இனியாவது மாற்றுங்கள். திராவிட மாடல் ஆட்சி வீழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

Published by:Karthick S
First published:

Tags: Arjun Sampath