திருமாவளவனின் தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

திருமாவளவனின் தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

தாயார் உடன் திருமாவளவன்

தனது தாயார் கடந்த ஒரு மாதமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தனது வாக்கை பதிவு செய்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

  இதையடுத்து திருமாவளவன் தற்போது தனது ட்விட்டர் பதிவில், “அங்கனூரில் நான் படித்த பள்ளியில் இன்று வாக்களித்தேன். வழக்கமாக அம்மாவும் உடன் வந்து வாக்களிப்பார். ஆனால், இன்று நான்மட்டுமே தனியாக வாக்களிக்கச் சென்றேன். ஒரு மாதமாக அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சைப்பெற்று வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை. மதுரைக்குப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  திருமாவளவனின் இந்தப் பதிவைப் பார்த்த பலரும் அவரது தாயார் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்பிவிடுவார் என ஆறுதல் கூறி வருகின்றனர்.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமாவளவனின் மூத்த சகோதரி பானுமதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு திருமாவளவன் உள்ளிட்ட குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: