Home /News /tamil-nadu /

புரெவி புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நாசம்...!

புரெவி புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நாசம்...!

Youtube Video

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெற்பயிர்கள் அழுகியுள்ளன.

  • News18
  • Last Updated :
    புரெவி புயலால் தமிழகம் முழுவதும் பெய்த கனமழையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

    தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூரில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்மணிகள் நீரில் மூழ்கின. விளைநிலங்கள் குளம் போல் காட்சியளிக்கும் நிலையில், ஏக்கருக்கு 25,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், வெண்ணவால்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த சோளப்பயிர்கள் சேதம் அடைந்தன. மழையால் சாய்ந்த சோளப்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    வேளாண்துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், சோளப்பயிர்களை காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால், 10 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் சேதம் அடைந்தன. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Also read... தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

    ராணிப்பேட்டையில் பெய்த தொடர் மழையால் விளைநிலங்களை வெள்ளநீர் சூழ்ந்தன. 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை மற்றும் சூறைக்காற்றால் சேதம் அடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெற்பயிர்கள் அழுகியுள்ளன. வடமதுரை, சின்னச் செங்காந்தகுளம், சித்தராஜ கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர் தேங்கி, 500 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் வீணாகி உள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Cyclone burevi

    அடுத்த செய்தி