சொந்த ஊரான அங்கனூரில் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தார் திருமாவளவன்

சொந்த ஊரான அங்கனூரில் நீண்டவரிசையில் நின்று வாக்களித்தார் திருமாவளவன்

திருமாவளவன்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

 • Share this:
  அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.

  அங்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் திருமாவளவன், பின்னர் செய்திளாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் திமுக கூட்டணி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

  திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசிக் கொண்டிருக்கிறது.” என்று கூறினார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில், சமூக இடைவெறியுடன் நின்று, உரிய கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் நடைபெற உள்ளது.

  Must Read : தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : குடும்பத்தினருடன் வாக்களித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: