• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி : கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜொலித்த தேசியக்கொடி ஒளி விளக்கு

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி : கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜொலித்த தேசியக்கொடி ஒளி விளக்கு

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் மூவர்ண கொடி மின் விளக்கு.

  • Share this:
    உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில், இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்திய சாதனையை விளக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில். தேசியக்கொடி ஒளி விளக்கில் ஜொலித்தது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கங்கை முதல் கடாரம் வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக  ராஜேந்திர சோழன்  உருவாக்கினான். அங்கு கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாக  உலக பிரசித்தி பெற்ற  பிரகதீஸ்வரர் கோவிலை கட்டி  13 அரை அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால்  ஒரே சிவலிங்கத்தை நிறுவினான்.

    இது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்திய அளவில் கொரானா தடுப்பூசி 100 கோடிக்கு மேல் மக்களுக்கு செலுத்தப்பட்டு சாதனை புரிந்ததை எடுத்துக்காட்டும்  வகையில் பிரகதீஸ்வரர் கோவில் கோபுரத்தில் மூவர்ண கொடியை நினைவுகூறும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய அளவில் மத்திய தொல்லியல் மற்றும் பாதுகாப்பு துறையின் சார்பாக தமிழ் நாட்டில் 5 இடங்களை தேர்வு செய்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் சிறப்பு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    Must Read : கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா

    இது அரியலூர் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள் மின்விளக்குள் மூலம் மூவர்ண கொடி நிறத்தில் ஜொலிக்கவிடப்பட்டன. டெல்லியில் செங்கோட்டை, குதுப் மினார், ஹைதராபாத்தில் சர் மினார் உள்ளிட்ட கலை சின்னங்கள் மின்விளக்குகளால் மூவர்ண கொடி நிறத்தில் காட்சியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: