முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோப்புப்படம்

கோப்புப்படம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும் காணப்படும்.

  • Last Updated :

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அத்துடன்கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெரும்பான்மையான பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

top videos

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும் , காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Weather Update