முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வுமையம்

மழை

மழை

Tamilnadu Weather | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்.

  • Last Updated :

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜனவரி 5 மற்றும் 6ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் அடுத்த 3 மணிநேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் , பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

top videos
    First published:

    Tags: Weather Update