• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Petrol-Diesel Price | 90 ரூபாயை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | 90 ரூபாயை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 89.39 ரூபாய், டீசல் லிட்டருக்கு 82.33 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த வியாழக்கிழமை புதிய உச்சத்தை  எட்டியது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 பைசா வரை உயர்த்தியுள்ளன.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ86.65 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.76.83 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் எந்தவித மாற்றமும் இன்றி இன்றும்  பெட்ரோல் விலை ரூ86.65 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.76.83 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.39 ரூபாய், டீசல் லிட்டர் 82.33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு 89.39 ரூபாய் எனவும், டீசல் விலை மாற்றமின்றி 82.33 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்தில் அரியலூர், கோயம்புத்தூர், கடலூர் தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர்,  கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை நெருங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை மாற்றம் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... பெங்களூரு சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை

    இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தால் மட்டுமே அவற்றின் விலை குறையும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: