நீட் தேர்வு எழுதி மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் நீட் தற்கொலை

அரியலூரில் நீட் தேர்வு சரியாக எழுதாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 • Share this:
  நீர் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மருத்துவ கனவோடு இருந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார்.

  இந்நிலையில் நீட் தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்துள்ளார். கருணாநிதி தன் மகளைதேற்றியுள்ளார். எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: கலைவாணன் ( அரியலூர்)

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   
  Published by:Ramprasath H
  First published: