ஐடி ரெய்டுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்.. இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது - மு.க.ஸ்டாலின்

ஐடி ரெய்டுக்கு நாங்கள் பயப்படமாட்டோம்.. இது பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், திமுக பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலின் கூறினார்.

 • Share this:
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், திமுக பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம் என ஸ்டாலின் கூறினார்.

  பெரம்பலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், பெரம்பலூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

  அப்போது அவர் பேசுகையில், “வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் எனது மகள் செந்தாமரை வீட்டில் தற்போது ரைடு நடத்தி வருகின்றனர். இதற்கு ஒருபோதும் திமுகவினர் பயப்படமாட்டோம். நாங்க பனங்காட்டு நரி, இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். நான் கலைஞரின் மகன்” என்று கூறினார்.

  தொடர்ந்து பேசிய அவர், இட ஒதுக்கீட்டு 16 சதவீதம் உள்ளதை 18 சதவீதம் கொண்டுவந்தது திமுக தான்.  இந்த சட்டமன்ற தேர்தலில்,  200 தொகுதிகளில் திமுக வெற்றிப்பெறும் என தொலைக்காட்சிகளில்  கருத்துகனிப்புகள் வந்தன. ஆனால் நான் செல்கிறேன் 234 தொகுதிகளில் வெற்றிப்பெறுவோம்” என்றார்

  பாம்பு பல்லிக்குக்கூட விஷம் குறைவு ஆனால் அதை விட, எடப்பாடி பழனிச்சாமி விஷம் அதிகம். இந்தியாவில் பெண்களுக்கு அதிக பாதிப்பு உள்ள மாநிலம் உத்திரப் பிரதேசம். அதை கன்டுக்கொள்ளாதவர் பிரதமர் நரேந்திர மோடி.

  Must Read : மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரி சோதனை

  திமுககாவை அச்சுறுத்தி மிரட்டும் வகையில் மோடி தலையில் ரைடு நடத்தப்படுகின்றது. ஆனா அதை கண்டு அஞ்ச மாட்டோம், நீங்க ரைடு நடித்தினால் அது திமுகவுக்கு பலம்தான் என்று கூறினார்.
  Published by:Suresh V
  First published: