தரமற்ற டீசலை ரூ.15 குறைவாக விற்ற வடமாநில கும்பல் - 23 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல்

டீசல் விற்பனை

அரியலூரில் தரமற்ற டீசலை ரூ.15 குறைவாக விற்ற வடமாநில லாரி டிரைவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  அரியலூர் மாவட்டத்தில் பயோ டீசல் எனக் கூறி குறைவான விலையில் தரமற்ற டீசலை விற்ற, வடமாநிலத்தவர்களிடமிருந்து 23 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

  இந்தியாவில் எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 93 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் சந்தை மதிப்பை காட்டிலும் 15 ரூபாய் அளவிற்கு குறைந்த விலையில், பயோ டீசல் விற்பனை களைகட்டியுள்ளது.

  Also Read:  திருமணத்தின்போது மணமகன் செய்த காரியம்.. பளார் விட்ட மணமகள் – வைரலாகும் வீடியோ

  இதையறிந்த, திருச்சி சரக பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பினர், உரிய அனுமதியின்றி கீழப்பழுவூர் அருகே வயல்வெளியில் டேங்கர் லாரி மூலம், கனரக வாகனங்களுக்கு டீசல் விற்பனை செய்வதாக புகார் அளித்தனர். குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர், அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் குறைந்த விலைக்கு டீசல் விற்றதாக, 23 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர்.

  Also Read:  இந்தியாவுக்கு இன்று யோகமான நாள்.. பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் வீரர்கள்

  விசாரணையில், டேங்கரில் இருந்து படகுகள் மற்றும் கப்பல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடிய, 70 சதவிகித அளவு மட்டுமே டீசல் கலப்பு கொண்ட தரம் குறைந்த எரிபொருள் என்பது அம்பலமானது. அது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது டீசல் மற்றும் மண்ணெண்ணெய்க்கு இடைப்பட்ட நிலையில் கிடைக்கும் எரிபொருள் ஆகும். இதனை மும்பையில் இருந்து உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்து விற்றதாக, டேங்கர் லாரி ஓட்டுனர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  குறைந்த விலைக்கு விற்கும் அளவிற்கு இவர்களுக்கு டீசல் எவ்வாறு கிடைத்தது என்று விசாரிக்கவும், அரசுக்கு இழப்பு ஏற்படும் செயலில் ஈடுபட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், பெட்ரோலியம் டீலர்ஸ் அசோசியேஷன் தரப்பில், காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: