அதிமுக கூட்டணயில் தொடர்வதா? வேண்டாமா? எல்.கே.சுதீஷ் தீவிர ஆலோசனை

எல்.கே சுதீஷ்

இன்று தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை அதிமுகவில் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை.

 • Share this:
  அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதா? வேண்டாமா என்பது குறித்து, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் எல்.கே.சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.

  அதிமுக - தேமுதிக கூட்டணியில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், 2011-ஆம் ஆண்டு கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருக்காவிட்டால், அதிமுக என்ற ஒரு கட்சியே இருக்காது என கூறினார். சுதீஷின் இந்த பேச்சு இரு கட்சிகளுக்கும் இடையேயான விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.

  இந்நிலையில் இன்று தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை அதிமுகவில் இருந்து எவ்வித அழைப்பும் வரவில்லை. இதனால் அடுத்தக்கட்ட முடிவு குறித்து சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எல்.கே.சுதீஷ் ஆலோசனை நடத்தினார்.

  இதனிடையே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷிடம் தனது விருப்பமனுவை அளித்தார். தனது விருப்பமனுவில் எந்த தொகுதி என குறிப்பிடாத போதிலும, அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், அரியலூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
  Published by:Vijay R
  First published: