எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எந்த நலனும் செய்யவில்லை - கனிமொழி

எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எந்த நலனும் செய்யவில்லை - கனிமொழி

கனிமொழி

வெற்றிநடை போடும் தமிழகம் என்பது, முதல்வருக்கும் அமைச்சருக்கும்தான் பொருந்தும் மக்களுக்கு இல்லை

 • Share this:
  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.சொ.க.கண்ணனை ஆதரித்து, திமுக மாநில மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு விவசாயத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஆதரித்தது. தற்போது தேர்தல் வந்ததால் மக்களை முட்டாளாக்கிறார். அதனால் தற்போது வேளாண் சட்டத்தில் மூன்றில் இரண்டை எதிர்கிறார்கள்.

  தர்மபுரியில் மக்கள் நேரடியாக கேள்வி கேட்கிறார்கள் முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை. செல்லும் இடம் எல்லாம், ஏரி குளம் தூர்வாரப்பட்டதால் குளம் இன்று நிரம்பி இருக்கிறது என்று உண்மைக்கு மாறாக முதல்வர் கூறி வருகிறார்.

  வெற்றிநடை போடும் தமிழகம் என்பது, முதல்வருக்கும் அமைச்சருக்கும்தான் பொருந்தும் மக்களுக்கு இல்லை, ஏன் என்றால் படித்த இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வேலை இல்லை. இப்படி உள்ள நிலையில் வெற்றி நடை போடுகிறது தமிழகம் என்பது எப்படி உண்மையாகும்.

  தான் விவசாயி என்று கூறும் முதல்வர், விவசாயிகளுக்கு எந்த நலனும் செய்ததில்லை. தேர்தல் வந்ததால், தற்போது விவசாய கடன் தள்ளுபடி என்று கூறுகிறார்.

  Must Read : 1 கோடி ரூபாய் பறிமுதல்: எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது

   

  திமுக ஆட்சி வந்தவுடன் மகளிர் சுய உதவிகுழு மீண்டும் செயல்படுத்தபடும். மாணவர்களுக்கு டேப், போன் வழங்கப்படும்” என்று கனிமொழி அப்போது கூறினார்.
  Published by:Suresh V
  First published: