Home /News /tamil-nadu /

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? - கமல்ஹாசன் கேள்வி

ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? - கமல்ஹாசன் கேள்வி

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான்_கேட்பேன் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    குடும்பங்களை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார். அதேநேரம், முதல்வரும் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல்ஹாசன் பதில்கூறினார்.

    அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம், சுதாதாரம் என முடிவுற்ற 39 திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், கமல்ஹாசன் நடத்தும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என சாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? என்றும் அவர் வினவினார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு ட்விட்டரில் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், முதலமைச்சரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இந்நிலையில் அதிமுகவை கமல்ஹாசன் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியுள்ளார்.

    அதேநேரம், இதுவரை தாங்கள் எழுப்பிய எந்த அரசியல் கேள்விகளுக்கும் பதில் சொல்லாதவர்கள், விமர்சனம் செய்ய மட்டுமே முன்வருவதாக மக்கள் நீதி மய்யம் இளைஞரணி செயலாளர் சினேகன் கூறியுள்ளார்..திமுக கூட்டணிக்கு கமல் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதாலேயே, அவரை, முதல்வர் காட்டமாக விமர்சித்து வருகிறார் என்று பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

     

     



     

    இவ்விதம் தேர்தல் நேரத்தில் கமல்ஹாசனை முதல்வர் நேரடியாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தற்போதும் மீண்டும் நடிகர் கமல்ஹாசன் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான்_கேட்பேன் என பதிவிட்டுள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cm edappadi palanisamy, Kamal hassan

    அடுத்த செய்தி