செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

Youtube Video

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  சென்னை, கோவை, காஞ்சிபுரம், அரியலூர் மட்டுமின்றி மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் இருநூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் செட்டிநாடு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 109 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட செட்டிநாடு குழுமத்திற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் உள்ளன. இந்த குழுமம் சிமெண்ட், மின்சாரம் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளையும் மருத்தவமனைகளையும் நடத்தி வருகிறது.

  மேலும் படிக்க...சென்னை கோடம்பாக்கத்தில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் விழுந்தவர் உயிரிழப்பு...

  ஏற்கெனவே 2015ம் ஆண்டு இதே குழுமத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதே போன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  காலை 8 மணிக்கு செட்டிநாடு பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நுழைந்த 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வருகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள
  Published by:Vaijayanthi S
  First published: