• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெயங்கொண்டத்தில் 70 ஆண்டு பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

ஜெயங்கொண்டத்தில் 70 ஆண்டு பழைமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி

புளியமரம்

புளியமரம்

மழையின் காரணமாக நள்ளிரவில் புளியமரம் சாய்ந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  • Share this:
    ஜெயங்கொண்டம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுவர் மீது புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பொதுமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழ சிந்தாமணி கிராமத்தில் வசித்து வருபவர் ரங்கநாதன். இவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கும்பகோணம்- விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள இவரது வீட்டின் முன்பு இருந்த புளிய மரமானது திடீரென வேரோடு சாய்ந்து வீட்டின் முன்பக்க சுவர் மீது விழுந்தது.

    பின்னர் சத்தம் கேட்டு எழுந்த ரங்கநாதன் மற்றும் அவரது மனைவி ருக்குமணி ஆகியோர் உடனடியாக அங்கிருந்து வெளியில் ஓடி வந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் சாலையோரத்தில் சாய்ந்து விழுந்த புளியமரமானது 70 ஆண்டுகால பழமை வாய்ந்த புளியமரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: