தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் கொடுத்த விருந்தை புறக்கணித்தால் தமிழை புறக்கணித்ததாக அர்த்தம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய, நகர, பேரூராட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக அமைப்பு செயலாளரும், பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் வழங்கிய தேனீர் விருந்தில் அதிமுகவினர் கலந்து கொண்டது குறித்து கேட்டபோது முதன்முதலாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் தேனீர் விருந்து கொடுப்பதாகவும் அதனை புறக்கணித்தால் தமிழை புறக்கணிப்பதற்கு சமம் எனவும் ஜெயக்குமார் கூறினார்.
மேலும் மகாகவி பாரதியார் சிலை திறப்பு விழாவில் கூட திமுக பங்கு பெறாதது பாரதியாரை அவமதிப்புக்குரிய செயலாக நான் கருதுகிறேன் என கூறினார். தமிழுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் காரணமாக தமிழ்ப் புத்தாண்டின் காரணமாக ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
நீட்டிற்க்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து போடுவோம் என ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்கள். நீட் ரத்து செய்வதற்கான சூட்சமம் எங்களுக்கு தான் தெரியும் என பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது அந்த வித்தையை காட்ட வேண்டியது தானே என ஜெயக்குமார் கூறினார்.
அவர்கள் சொன்னதை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்புவதற்காக ஆளுநர் மீது பழியைப் போட்டு தப்பிக்கும் முயற்சியாக திமுக ஆளுனர் மாளிகையில் கொண்டாடிய தமிழ் புத்தாண்டை புறக்கணித்துள்ளனர் என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
Also read... கிருஷ்ணகிரியில் வாகன விபத்து ஏற்படுத்தியவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது
மேலும், சசிகலாவின் ஆன்மீக பயணம் குறித்து கேட்டபோது யார் வேணாலும் ஆன்மீக பயணம் செய்யலாம் அதற்கு நீங்களும் போகலாம், நானும் போகலாம் அதற்கு தனிப்பட்ட கருத்து இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுக அரசின் ஓராண்டு ஆட்சிக்கு மார்க் போட்டால் ஜீரோ தான் போட வேண்டும் அவர்கள் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் அனைத்து நலத்திட்டங்களும் திமுக அரசு முடக்கி விட்டது எனவும் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
-செய்தியாளர்: கலைவாணன்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.