103 வயதில் ஜனநாயக கடமையை ஆற்ற வந்த முன்னாள் ராணுவ வீரர்...

முன்னாள் ராணுவ வீரர்

அரியலூர் அருகே தழுதாழை மேட்டில் 103 வயதில் ஜனநாயக கடமையை தனது மனைவியுடன் ஆற்ற முன்னாள் இந்திய ராணுவ வீரர் வந்தார்.

 • Share this:
  அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,3025 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 355 மையங்களில் 753 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

  இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து 53 மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்கள், வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் மை, வாக்காளர் பட்டியல், வேட்பாளர்கள் விவரம், பூத் விவர அறிவிப்பு பதாகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

  மேலும் படிக்க... சுடுகாடு இல்லை... திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை புறக்கணித்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள்

  இந்நிலையில் இன்று காலையில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.  இதில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழை மேடு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த 103 வயது முதியவர் தனது  ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.  இவர் ஜவல்பூரில் இந்திய இராணுவத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வேலை பார்த்தவர். 90 வயதான தனது மனைவி சிவகாமி  உடன் மதியம் தழுதாழை மேடு ஊராட்சி ஒன்றியம் தொடக்கப் பள்ளியில் வந்து வாக்களித்தார்.

  அரியலூர் செய்தியாளர் : கலைவாணன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: