• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள்

இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சி

இந்திய யூனியன் முஸ்லீம் லிக் கட்சி

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  • Share this:
    திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 4 தொகுதிகள் என தற்போதுவரை 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்படும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உள்ளது.

    விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகள் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், 2 தொகுதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே தொகுதியை மற்றவர்களும் கேட்பதால் தாமதமாகி வருவதாகவும் நான்கு தனி தொகுதிகள் இரண்டு பொது தொகுதிகள் என்ற விகிதத்தில் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அடையாளம் காணும் பணி முடிந்தவுடன் நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி பட்டியலை வெளியிடுவார் என தெரிகிறது. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் காண உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: