Home /News /tamil-nadu /

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிப்பு

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதையடுத்து ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

    அதன்படி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, வால்பாறை, சிவகங்கை, திருத்துறைப்பூண்டி , தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

    திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய இடங்களில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியிலும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி உசிலம்பட்டி தொகுதியிலும் திமுக கூட்டணியில் போட்டியிடுகிறது.

    திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதை இறுதி செய்யும் பணி முடிந்தவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை இன்று வெளியிடுவார் என தெரிகிறது. திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி 173 இடங்களில் திமுக நேரடியாக களம் காண உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Communist Party, DMK Alliance, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி