Home /News /tamil-nadu /

Cyclone Nivar: புதுவையில் இருந்து 120 கிமீ தொலைவில் நிவர் புயல்.. பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை

Cyclone Nivar: புதுவையில் இருந்து 120 கிமீ தொலைவில் நிவர் புயல்.. பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை

புயல்

புயல்

அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

    புதுச்சேரியிலிருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 215 கிமீ தொலைவிலும், கடலூரிலிருந்து 110 கிமீ தொலைவிலும் நிவர் புயல்  நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயலானது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்.

    அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

    .கனமழை பொருத்தவரையில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் கடலூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மயிலாடுதுறை அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.

    பலத்த காற்றை பொறுத்தவரையில் முன்பு கூறியபடி புயல் கரையை கடக்கும் பகுதியில் நாகப்பட்டினம் காரைக்கால் மயிலாடுதுறை கடலூர் புதுவை விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    மேலும் திருவாரூர் காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 100 கிலோமீட்டர் வேத்தில் வீசக்கூடும்.

    கடல் இன்று இரவு வரை தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படும் .





    மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Cyclone Nivar

    அடுத்த செய்தி