Home /News /tamil-nadu /

Cyclone Nivar | கரையைக் கடக்கத் தொடங்கிய நிவர்: அதிகாலை 3 மணிக்கு முழுவதும் கடக்கும்

Cyclone Nivar | கரையைக் கடக்கத் தொடங்கிய நிவர்: அதிகாலை 3 மணிக்கு முழுவதும் கடக்கும்

நிவர் புயலின் தற்போதைய நிலை

நிவர் புயலின் தற்போதைய நிலை

புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

    நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்து பெருமளவில் பாதிப்படைந்த மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் இரண்டு நாள்களாக பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதியில் மழை நீரால் மூழ்கியுள்ளது. இந்தநிலையில், இன்று மாலை முதலே சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழுவதுமாக மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பிவருவதன் காரணமாக அந்த ஏரியிலிருந்து விநாடிக்கு 9,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. எனவே, அடையாறு ஆற்றின் கரையில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    முன்னதாக, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. கரையை நோக்கி மெதுவாக வந்த நிவர், தற்போது கரையைக் கடக்கத் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்குள் முழு புயலும் கரையைக் கடந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, புயல் முழுதாக கரையைக கடந்த பின்னரும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் 145 கி.மீ வரை வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 40 கி.மீ, கடலூருக்கு 50 கி.மீ தொலைவில் புயல் உள்ளது. சென்னையிலிருந்து 120 கி.மீ தொலைவில் புயல் உள்ளது.

    அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    பெரம்பலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cyclone Nivar

    அடுத்த செய்தி