Home /News /tamil-nadu /

Cyclone Nivar | நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..

Cyclone Nivar | நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..

மழை

மழை

நிவர் புயலை முன்னிட்டு, மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் மேற்பார்வையிட, 11 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க 11 மாவட்டங்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐ.ஜி., அன்புவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, ஐ.ஜி வனிதாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு டிஐஜி சத்யபிரியாவும், கடலூர் மாவட்டத்திற்கு வடக்கு மண்டல ஐஜி நாகராஜனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கும் சாரங்கன் ஐபிஎஸ், நியமிக்கப்பட்டு இருக்கிறார். டிஐஜி லலிதா லட்சுமி புதுக்கோட்டைக்கும், செந்தில் குமாரி தஞ்சைக்கும், தமிழ் சந்திரன் திருவாரூருக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் படிக்க...பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ஆளுநரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்..



    நாகை மாவட்டத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். புயல் மீட்பு நடவடிக்கைகளை, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ADGP ஏ.கே.விஸ்வநாதன் கண்காணிக்க இருக்கிறார்.

    அதேபோல மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    திருவாரூர் மாவட்டத்திற்கு மணிவாசன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சுப்பையன், நாகைக்கு முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சம்பு கல்லோலிகர், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சமய மூர்த்தி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், விழுப்புரம் மாவட்டத்திற்கு ஹர்மந்தர் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்திற்கு ககன் தீப் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். புயல், வெள்ள காலங்களில் மீட்பு, நிவாரண பணிகளை கண்காணிக்க ஏற்கனவே அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிவர் புயலை ஒட்டி, அதிகாரிகளில் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cyclone Nivar, Disaster rescue commission, IPS Officers, Nivar, Tamil Nadu Weather, Weather

    அடுத்த செய்தி