Home /News /tamil-nadu /

புரெவி புயல் : அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

புரெவி புயல் : அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்

மழை

மழை

Cyclone Burevi | அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புரெவி புயல் காரணமாக சென்னை, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    வங்க கடலில் மையம் கொண்டிருந்த புரெவி புயல் இன்று மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பனுக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இப்புயல், 04.12.2020 அன்று அதிகாலை பாம்பன் - கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும்.

    மேலும் அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புரெவி புயல் இன்று நள்ளிரவு பாம்பன் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 04) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி  மாதத்தில் ஒரு சனிக்கிழமை வேலை நாள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Cyclone burevi

    அடுத்த செய்தி