அரியலூரில் குழந்தை திருமணம் செய்து வைத்த சிறுமியின் அம்மா உள்ளிட்ட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ். இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கூலி வேலைக்காக சென்றபோது அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து தனது அம்மா செல்வியிடம் சிறுமி கூறியதையடுத்து உறவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அடைக்கலராஜ்க்கு சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் சிறுமி பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியிடம் விவரம் கேட்டபோது சிறுமிக்கு 15 வயது என்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் கார்த்திகேயன் சிறுமியிடம் விசாரணை செய்தார்.
குழந்தை திருமணம் செய்ததாக அடைக்கலராஜ் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தலைமறைவான அடைக்கலராஜ் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் அம்மா செல்வி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: கலைவாணன் ( அரியலூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.