ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரியலூர் மாணவிக்காக நீதி கேட்டு பாஜகவினர் ட்வீட்... தேசிய அளவில் ட்ரெண்ட்..

அரியலூர் மாணவிக்காக நீதி கேட்டு பாஜகவினர் ட்வீட்... தேசிய அளவில் ட்ரெண்ட்..

பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக ஆர்ப்பாட்டம்

உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும் எனக் கூறி அவரது பெயருடன் நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அரியலூரில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு மதமாற்றமே காரணம் என பாஜகவினர் தொடர்ந்து கூறிவருகின்றனர். உயிரிழந்த மாணவிக்கு நீதிகேட்டு பாஜகவினர் பதிவிடும் ட்வீட்களால் இந்த விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத மாற்ற முயற்சியினாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பாஜகவினர் கூறிவருகின்றனர். மாணவி மரண வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றையும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

எனினும், மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல என  தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவுளிபிரியா விளக்கம் அளித்துள்ளார். மாணவி ஜனவரி 19ம் தேதி உயிரிழந்த நிலையில்,  கடந்த 16ஆம் தேதி தஞ்சாவூர் நீதித் துறை நடுவரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதி நிர்வாகி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு நேற்று தஞ்சையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கருப்பு முருகானந்தம் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் நகைக்காக 4 வயது சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்துவைத்த பெண்- வீட்டை சூறையாடிய பொதுமக்கள்

மேலும், உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும் எனக் கூறி அவரது பெயருடன் நீதி வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இதனிடையே, சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ், சிறுமி இறப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சை எஸ்பி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.  இந்த வழக்கை சி.ஐ.டி. அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர், கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை

First published:

Tags: Ariyalur, BJP, Suicide, Twitter