Home /News /tamil-nadu /

அரியலூர் பாஜக தலைவர் கைது... தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்றதால் சர்ச்சை

அரியலூர் பாஜக தலைவர் கைது... தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என்றதால் சர்ச்சை

பாஜக நிர்வாகி கைது

பாஜக நிர்வாகி கைது

தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் எனக் கூறிய அரியலூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்ககோரி டிசம்பர் 1-ம் தேதி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை  குறைத்துள்ள போதிலும் தமிழக அரசு வாட் வரியை குறைக்காததால் அண்டை மாநிலங்கலுக்கு இணையாக தமிழகத்தில் எரிபொருள் விலை குறையவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் பாஜக வர்த்தக அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு அக்கட்சியின் மாவட்ட தலைவர் ஐய்யப்பன், ஒரு வாரத்திற்குள் வாட் வரியை குறைக்கவில்லை என்றால் மாவட்டத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்று அச்சுறுத்தும் வகையில் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

    Also Read : அதிமுக தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி கே.சி.பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜாநகர விஏஓ அரியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை அரியலூர் போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை ஆஜர்படுத்தினர்

    முன்னதாக ஜெயங்கொண்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஒபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக ஜெயங்கொண்டம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அகோரத்தை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BJP, Crime | குற்றச் செய்திகள், MKStalin

    அடுத்த செய்தி