ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார் அரியலூர் இளம் வீரர் கார்த்திக்!

இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வானார் அரியலூர் இளம் வீரர் கார்த்திக்!

அரியலூர் இளம் வீரர் கார்த்திக்

அரியலூர் இளம் வீரர் கார்த்திக்

Hockey player Karthi : ஆசிய கோப்பைக்கான இந்தியா ஹாக்கி அணியில் தேர்வு செய்யப்பட்டார் அரியலூர் மாவட்டடத்தைச் சேர்ந்த இளம் வீரரரான கார்த்திக். 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அரியலூர் நகரை சேர்ந்த கார்த்திக், 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை செல்வம், வங்கியில் இரவு நேர காவலராக பணியாற்றி தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் காவலராக பணியாற்றி வருகின்றார்.

  தாய் வளர்மதி  வீடுகளில்  பத்து பாத்திரம் தேய்த்து வீட்டு வேலை செய்து கார்திக்கை படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் 7 ஆம் வகுப்பு வரை அரியலூரில் உள்ள தூய மேரி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். பின்னர் சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ யில் 7 முதல் 10 வரை படித்துள்ளார்.

  அதன் பின்னர் கார்த்திக்கின் விளையாட்டு திறனை பார்த்த திருச்சி தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர், கார்த்திக்கை அழைத்து விளையாட்டு திறனை  மேம்படுத்தியுள்ளார். இதனத் தொடர்ந்து, அவர் கோவில்பட்டி எஸ்.எஸ் துரை சாமி நாடார் கல்லூரியில்  இளங்கலை வரலாறு படிப்பில் சேர்ந்தார்.

  இந்நிலையில், அங்கிருந்து அவரது  விளையாட்டு திறனால், பெங்களூர் சாய் விளையாட்டு மையத்திற்கு எக்லான்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். அங்கு பல போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

  Must Read : கேள்வி கேட்க எழுந்த செல்லூர் ராஜு... சபாநாயகரிடம் முறையிட்ட துரைமுருகன்.. பேரவையில் சிரிப்பலை

  குடும்பத்தினருடன் கார்த்திக்

  தற்போது இந்தோனேஷியால் நடைபெறயிருக்கும் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் முன்கள  ஆட்டக்காரராக விளையாட‌ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  இப்போட்டி வரும் 23 ஆம் தேதி தொடங்கயுள்ளது. தொடக்க போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடயுள்ளதாக தெரிகிறது.

  கார்த்திக்கின் வீடு

  ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கார்த்திக் விளையாட்டுக்காக தன்னுடைய விடா முயற்சியாலும், ஆட்ட திறனாலும் தேர்வாகியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு  கார்த்திக் தேர்வாகி அரியலூருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

  செய்தியாளர் - கலைவாணன்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Ariyalur, Hockey, Sports Player