ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

15 வயது சிறுவனுடன் ஆசிரியைக்கு மலர்ந்த காதல்.. போக்ஸோ சட்டத்தில் கைது

15 வயது சிறுவனுடன் ஆசிரியைக்கு மலர்ந்த காதல்.. போக்ஸோ சட்டத்தில் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அரியலூர்  பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இளம்பெண் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி (வயது 24). இவர் அரியலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அதேப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதுகுறித்து இருவீட்டாரும் அறிந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரிடமும் இருந்து கடுமையான  எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சிறுவன் பாட்டியின் வீடு பெரம்பலூர் மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் உள்ளது. இருவரும் அரியலூரில் இருந்து பெரம்பலூரில் உள்ள சிறுவனின் பாட்டி வீட்டுக்கு சென்றனர். இருவரும் அங்கு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: பெண்களோடு உல்லாசமாக இருக்க கொள்ளை தொழில்... பூட்டிய வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது.. 95 சவரன் நகைகள் பறிமுதல்

மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதனையடுத்து சிறுவனின் தந்தை குன்னம் போலீசில் ராசாத்தி மீது புகார் அளித்தார். அந்தப்புகாரில் தன் மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளம்பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

First published:

Tags: Crime News, POCSO case, School Teacher, Sexual abuse, Student