அரியலூர் மாணவி தற்கொலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே தனியார் உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் எனது மகளை மதம் மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும். பள்ளி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும். தஞ்சாவூரில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மாணவியின் பெற்றோர் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தை மூடி சீலிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஞாயிறன்று மாணவியின் பெற்றோர் தஞ்சையில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில், மாணவியின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “எப்போதும் நான் தான் முதல் மதிப்பெண் பெறுவேன். ஆனால் இந்த ஆண்டு குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கு சரியாக செல்ல முடியவில்லை, லேட்டாகத்தான் சென்றான். அதனால் அங்குள்ள சிஸ்டர் என்னை கணக்கு பார்க்க சொல்வார்கள், இல்லை நான் படிக்க வேண்டும் என்று கூற போதும் அவர்கள் என விட மாட்டார்கள். பரவால்ல நீ எழுதி கொடுத்துட்டு உன் வேலையை பாரு என்று வற்புறுத்துவார்கள்.
நான் சரியாக எழுதினாலும் தப்பு தப்பு என்று கூறுவார்கள். ஒரு மணி நேரம் என்னை உட்கார வைத்து விடுவார்கள். அதனால் மதிப்பெண் குறைவாக எடுத்தேன். என்னால் படிக்க முடியாது என்பதால் விஷம் குடித்தேன். அனைத்து வேலைகளையும் என்னை செய்ய சொல்வார்கள்.வீட்டுக்கு போக வேண்டும் என்று கேட்கும் போது, விடமாட்டார்கள். இங்கேயே இருந்து படி என்பார்கள். பொட்டு வைக்க கூடாது என்று என்னை வற்புறுத்தவில்லை என மாணவி கூறியுள்ளார்.
செய்தியாளர்: கலைவாணன் (அரியலூர்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.