அரியலூர் அரசு பள்ளி பெண் ஆசிரியர்களை கவுரவித்த நாசா!

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர்.

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர்.

  • Share this:
18 வகையான விண்கற்களை ஆய்வு செய்து வகைப்படுத்தி சாதித்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாசா பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கீழ் இயங்கக்கூடிய பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிக்குரு கொலாப் என்ற நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு விண்கற்களின் வகைகளை கண்டுபிடிப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதில், அரியலூர் மாவட்டம் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை கவிதா மற்றும் கருப்பூர் சேனாதிபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை கிரிஜா இருவரும் கடந்த ஜூலை மாதம் நகரும் விண்கற்களை கண்டுபிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஹய்தி தீவில் உள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பூமியை நோக்கி வரும் விண்கற்களை இரவு நேரங்களில் எடுக்கப்பட்ட படங்களை பெற்று ஆய்விற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் அறிவியலாளர்களுக்கு அனுப்பி வருகிறது.



இதனை பெறும் அறிவியலாளர்கள் நகரும் வகையில் உள்ள புகைப்படங்களை ஆய்வு செய்து அதன் மூலம் விண்கற்களை கண்டுபிடித்து அதன் ஆய்வறிக்கையை சிக்குரு கொலாப் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழிமுறைப்படி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து 40 விதமான நகரும் பொருட்களை கண்டுபிடித்து ஆய்வை சமர்ப்பித்துள்ளனர். ஆசிரியர்களின் ஆய்வறிக்கை நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. 18 விண்கற்கள் இருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அவை, விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டால் இந்த நகரும் விண்கற்களுக்கு அதனை கண்டுபிடித்த ஆசிரியைகளின் பெயர் வைப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். மேலும், விண்கற்கள் குறித்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ள ஆசிரியைகளுக்கு மக்கள் அறிவியலாளர் என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

Must Read | திருநம்பி, திருநங்கைகளுக்காக தமிழகத்தின் முதல் கட்டணமில்லா விடுதி! குவியும் பாராட்டு

தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களின் குழுவை அமைத்து அவர்களுடன் சேர்ந்து விண்கற்களை கண்டறியும் வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களையும் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க முடியும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். விண்கற்களை கண்டுபிடித்து நாசாவின் சான்றிதழ் பெற்ற ஆசிரியைகளை அரியலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது இவ்வகையான ஆய்வறிக்கையை தாக்கல் செய்திருப்பது விண்வெளியில் மேலும் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியுள்ளது. வருங்காலங்களில் நாசாவின் மூலம் மேற்கொள்ளப்படும் வான்வெளி குறித்த ஆராய்ச்சிகளில் எங்களின் பங்கு கண்டிப்பாக இருக்கும் என்றும், மேலும் இதனால் விண்கற்கள் என்றால் என்ன?, அதன் ஆயுள் காலம், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அறிந்து கொண்டோம். இதனை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. வருங்காலங்களில் இவ்வகையான ஆராய்ச்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஆசிரியைகள் பெருமையுடன் தெரிவித்தனர்.
Published by:Archana R
First published: