Home /News /tamil-nadu /

அரியலூரில் சுகாதாரமற்ற குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு... வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

அரியலூரில் சுகாதாரமற்ற குடிநீரால் பொதுமக்கள் பாதிப்பு... வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி

குடிநீரால் நகரவாசிகள் பாதிப்பு

குடிநீரால் நகரவாசிகள் பாதிப்பு

Ariyalur District : குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அரியலூர் நகரில் பெரும்பான்மையான மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அரியலூர் சுகாதாரமற்ற குடிநீரால் நகரவாசிகள் பாதிப்படைந்துள்ளனர். அரியலூர் நகரில் 18 வார்டுகள் அமைந்துள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது கொள்ளிடம் குடிதண்ணீர். கொள்ளிடம் குடிநீரானது கொள்ளிடம் ஆற்றிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

    இதனிடையே அண்மையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அரியலூர் நகரில் பெரும்பான்மையான மக்களுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதையும் படியுங்கள் : நகைக்கடன் தள்ளுபடி: உச்சிப்புளி கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பெண்கள்..

    இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி படிக்கட்டுகள் உடைந்த நிலையில்  இருப்பதாலும் லிக்யூடு குளோரின் அளவு மின் இணைப்பு இல்லாமல் உள்ளதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் எப்படி வருகிறதோ அப்படியே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குடிநீர் இணைப்பு வழங்கி குளோரினேற்றம் செய்து பொதுமக்களுக்கு நல்ல தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

    செய்தியாளர் : கலைவாணன், அரியலூர் மாவட்டம்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ariyalur

    அடுத்த செய்தி