ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'முந்திரி பழச்சாறு கம்பெனி அமைக்க முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் முந்திரியுடன் வந்து ஆர்ப்பாட்டம்

'முந்திரி பழச்சாறு கம்பெனி அமைக்க முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் முந்திரியுடன் வந்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் முந்திரி கொட்டையுடன்‌ ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் முந்திரி கொட்டையுடன்‌ ஆர்ப்பாட்டம்

Farmers Protest : அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பழச்சாறு கம்பெனி அமைக்க வேண்டும். குருவாடியில் தடுப்பணை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அரியலூர் - மாவட்டத்தில் முந்திரி பழச்சாறு கம்பெனி அமைக்க முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர் முந்திரி கொட்டையுடன்‌ ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர்  ஒன்றியத்தில் பொன்னாற்று பாசன வாய்க்கால்  மூலம்  இருபத்தி நான்காயிரம் ஏக்கர்  பாசனவசதி பெறும். இந்நிலையில்  பொன்னாற்று தலைப்பில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இதில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் தடுப்பணை கட்ட அறிவிப்பை  வெளியிட வேண்டும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் செந்துறை,உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய  முந்திரி பழச்சாறு கம்பெனி அமைக்க வேண்டும் எனவும் இந்த கோரிக்கையை முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும் என  மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அதிகாரியிடம் மனு அளித்து திரும்பிச் சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

இது குறித்து மாநிலத் தலைவர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது , “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி செய்வோம் என  தேர்தலுக்கு முன்பாக திமுக தரப்பில் கூறினார்கள்  ஆனால், 5 பவுனுக்கு மேல் ஒரு கிராம் இருந்தாலும் , 500 மில்லி இருந்தாலும் அவங்களுக்கும் தள்ளுபடி பண்ணுங்க. 6 பவுனுக்குள்ள நீங்க தள்ளுபடி பண்ணுங்க.  அதேபோல், அரியலூர் மாவட்டம் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. முந்திரி விவசாயம் அரியலூர் மாவட்டத்தில் முதன்மை விவசாயமாக உள்ளது.

கடலூர் , தஞ்சை மாவட்டம் செஞ்சிப்பட்டி , கந்தர்வ கோட்டை  ஆகிய பகுதிகளை  முந்திரி விவசாயி வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. நாங்க ஆட்சிக்கு வந்தா முந்திரி பழச்சாறு கம்பெனி ஆரம்பிப்போம்னு முதல்வர் கூறினார். ஆனால் இந்த பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பு இடம்பெறவில்லை. எனவே, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.  குருவாடில தடுப்பணை கட்ட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் : கலைவாணன், அரியலூர் மாவட்டம்

First published:

Tags: Ariyalur, Farmers Protest