ஜெயங்கொண்டம் அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா. இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றதாகவும், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழூவூரை சேர்ந்த சந்திரா என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.
ALSO READ | சொத்து வரி உயர்வை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு
இதைத் தொடர்ந்து சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள், அதற்கு உடைந்தையாக இருந்தவர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் விடுதியில் வைத்து சிறுமியுடன் உடலுறவு கொண்ட மனோஜ்குமார் (48) என்பவரை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
செய்தியாளர் : கலைவாணன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.