Home /News /tamil-nadu /

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கோரும் அண்ணாமலை

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கோரும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து உடனடியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் மத மாற்றத்துக்கு வற்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப் படவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயின் மகள். இவர் அரியலூர் மாவட்டத் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து படித்து உள்ளார். பள்ளியில் மிக நன்றாகப் படிக்கும் இந்த மாணவி தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

    பள்ளி நிர்வாகத்தின் சார்பாக, சிஸ்டர் சகாயமேரி என்பவர் இவரை மதம் மாறச் சொல்லி, தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். மாணவியின் பெற்றோர்களையும் சந்தித்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும் மாணவியின் பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், மாணவியை படிக்க விடாது விடுதியின் கணக்கு வழக்குகளையும் இதர வேலைகளையும் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துள்ளார்.

    ஹாஸ்டலில் கடுமையாக வேலை வாங்கியதாக கூறி மாணவி தற்கொலை.. வார்டன் கைது





    மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால், மனம் உடைந்த மாணவி  தற்கொலை செய்து கொள்ள பள்ளியில் இருந்த விஷத் தன்மைகொண்ட திரவத்தை அருந்தியுள்ளார். தொடர்ந்து வாந்தியும் உடல்நலக்கேடும் ஏற்பட்டதால் மாணவியை பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்துவிட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனளிக்காமல் மாணவி நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.


    பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்துக்கு முன், பேசிய வீடியோ பதிவு மனதைப் பதறவைக்கும். போலீசாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்துக்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிற்கு சம்மந்தமில்லாமல் உள்ளது. அதில், கட்டாயம் மத மாற்றம் செய்வதற்காக மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை.

    மரணத்துக்கு முன் மாணவி கொடுத்த வீடியோ பதிவு மிகத் தெளிவாக சிஸ்டர் சகாயமேரி மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் மத மாற்றத்துக்கு கட்டாயப்படுத்தியதை உறுதி செய்கிறு. ஆகவே, அரசு நடுநிலையான விசாரணை நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும். மாணவியின் மரணத்துக்கு நியாயம் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai

    அடுத்த செய்தி