ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைபாம்பு..

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைபாம்பு..

மலைபாம்பு

மலைபாம்பு

Ariyalur District : மலைபாம்பினை அரியலூர் தீயணைப்பு நிலையம் கொண்டு வந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காட்டிற்குள் விடப்போவதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  அரியலூர் வஞ்சத்தான் ஒடையில் மீனுக்கு விரித்த வலையில்  10 அடி நீளமுள்ள மலைபாம்பு பிடிப்பட்டது.

  அரியலூர் அருகேயுள்ள பாலாம்பாடி கிராமத்தில் வஞ்சத்தான் ஒடை உள்ளது. இந்த ஒடையில் மீன் பிடிப்பதற்காக விரித்த வலையில் மலைபாம்பு ஒன்று சிக்கியுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவர் தீயணைப்பு துறைக்கு இன்று தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான வீரர்கள் அப்பகுதி சென்று ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு மலைபாம்பை லாகவமாக பிடித்தனர்.

  பின்னர் மலைபாம்பினை அரியலூர் தீயணைப்பு நிலையம் கொண்டு வந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனவர் சக்திவேலிடம் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒப்படைக்கபட்டு பின்னர் பேரளி அல்லது பச்சைமலை காட்டில் விடப்போவதாக கூறினார்.

  செய்தியாளர் : கலைவாணன்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Ariyalur