செல்போனில் வந்த செய்வினை.. மாந்திரீகம் செய்வதாக கூறி 12 லட்சம் மோசடி - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்
செல்போனில் வந்த செய்வினை.. மாந்திரீகம் செய்வதாக கூறி 12 லட்சம் மோசடி - அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்
ஏமாற்றிய நபர்கள்
Ariyalur District : மொபைல் நம்பரை பெற்று மூன்று பேரும் தொடர்ந்து போன் செய்து பரிகாரம் செய்யவில்லை எனில் வீட்டில் அசம்பாவிதம் நடக்கும் என் அச்சுறுத்தி விஜயகுமாரிடம் நேரடியாகவும்,வங்கி மூலமாகவும்,12 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது.
அரியலூர் பகுதியில் மாந்திரீகம் செய்வதாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் வாலாஜநகரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தனது மொபைல் நம்பருக்கு செல்போனில் உனக்கு செய்வினை வைத்துள்ளதாக வந்த தகவலை நம்பி 12 லட்சம் செலுத்தி ஏமாந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 4 ஆம் தேதி புகார் செய்தார். புகாரை அடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் வல்லவராஜ், கிருஷ்ணன், பேய்தலையன் ஆகிய மூவரை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் எருமைபாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கைரேகை பார்ப்பதாக கூறி பேச்சுக்கொடுக்கும் இவர்கள் தோஷம், செய்வினை உள்ளதாக கூறி அவர்களிடம் மொபைல் நம்பரை பெற்று வந்தனர். அந்த எண்ணுக்கு தொடர்ந்து போன் செய்து தோஷம், செய்வினை உள்ளது பரிகாரம் செய்யவில்லை எனில் உங்கள் வீட்டில் அசம்பாவிதம் நடக்கும் என அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இதுபோலவே அரியலூரை சேர்ந்த விஜயகுமாரின் எண்ணையும் பெற்றுள்ளனர். விஜயகுமாருக்கு போன் செய்து தொடர்ந்து பேசி வந்துள்ளனர். விஜயகுமாரிடம் நேரடியாகவும்,வங்கிமூலமாகவும்,12 லட்சம் ஏமாற்றியது தெரியவந்தது.இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6,30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் கார், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் : கலைவாணன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.