அண்ணா பிறந்தநாள்: அலங்கரிப்பட்ட திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை

சசிகலா

திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளின் உருவாக்கத்திற்கு அண்ணாவின் பங்கு இன்றியமையாதது.

  • Share this:
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113ஆவது பிறந்தநாளான இன்று சசிகலா, அண்ணா அவர்களின் திருவுறுவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அண்ணா என்று அன்பேடு அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை அவர்களி 113ஆவது பிறந்தநாள் ஆஙகாங்கே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் கட்சி தலைவர்கள், உள்ளிட்ட பலர் அங்காங்கே, அண்ணாவின் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சசிகலா அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அறிஞர் அண்ணா, 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி வளர்த்தார். தமிழகத்தின் நவீன முன்னேற்றத்திற்காகவும், சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகவும் அரசியல் அதிகாரத்தை தேவை என்பதை விளக்கி, அதற்கான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதையை உருவாக்குவதில் அண்ணா பெரும்பங்காற்றியவர்.

    Must Read : மாற்று கருத்து கொண்டவர்களையும் பேச்சாற்றலால் மயக்கிய அறிஞர் அண்ணா

    திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளின் உருவாக்கத்திற்கு அண்ணாவின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் பலரும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published: