ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணா பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை

அண்ணா பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலைக்கு மரியாதை

மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

அண்ணா பிறந்தநாளையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலைக்கு திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து வள்ளுவர் கோட்டம் சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

  முதலமைச்சருடன் அமைசர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, மா. சுப்பிரமணியன், மற்றும் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

  இதேபோல, திருவண்ணாமலை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

  நாமக்கல்லில் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் பட்டாசு வெடித்து மேளதாளங்களுடன் திமுகவினர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

  புதுச்சேரி அண்ணாசாலையில் அமைந்துள்ள, அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கண்ணாடி, சம்பத், செந்தில்குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

  Must Read : மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேச்சாற்றலால் மயக்கிய அறிஞர் அண்ணா

  இதேபோல, ஆங்காங்கே திமுகவினர் அண்ணாவின் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  அண்ணா சிலைக்கு மரியாதை

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Anna birthday, MK Stalin, News On Instagram