போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்... நீதிமன்றத்தில் வாதம்!

போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றம்... நீதிமன்றத்தில் வாதம்!
புதுக்கோட்டையில் நடைபெறும் போராட்டம்
  • Share this:
போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்களை எதிர்த்த வழக்கில் வாதிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துபோது, மனுதாரர் கண்ணன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், காவல்துறை அனுமதி இல்லாமல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பொது மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் போராடி வருவதாக குற்றம்சாட்டினார்.


மேலும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தான் சரியாக இருக்குமே தவிர, இதுபோன்ற போராட்டம் நடத்துவது சட்டவிரோதமாக தான் கருத வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் வலியுறுத்தினர்.

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறார் நீதி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும், அதன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், 5 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்தார். ஆனால் இந்த சட்டத்தின் கீழ் காவல்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, போராட்டங்கள் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading