Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி - சி.வி.சண்முகம் இடையே வாக்குவாதம்

அதிமுக பொதுக்குழுவில் கே.பி.முனுசாமி - சி.வி.சண்முகம் இடையே வாக்குவாதம்

அதிமுக பொதுக்குழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்டம்

Aiadmk general council meeting : ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பொறுப்பு மற்றும் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கிடையே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.அப்போது, அதிமுக தலைமைக் கழகத்தின் பூட்டிய கதவுகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்தனர். அதனைத் தொடர்ந்து, தொண்டர்கள் ஆதரவோடு ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமையகத்திற்குள் நுழைந்தார்.

    இந்த வன்முறைகள் தொடர்பாக அதிமுக பொதுக்குழுவில் பேசிய மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓபிஎஸ் சென்றார். ஆனால், இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார். நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓபிஎஸ் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஓபிஎஸ் விரக்தியின் உச்சசத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விழா மேடையில், பேசிய தங்கமணி, அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் கட்சிக்கு தேவையா என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், ஓபிஎஸ்-ஐ நீக்க உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சி.வி. சண்முகம் காட்டமாக வாக்குவாதம் செய்தார்.

    இந்நிலையில், ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார். பொதுக்குழு உறுப்பினர்களே கோரிக்கை வைப்பதால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், விழா மேடையில், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி.முனுசாமி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்படும் என கே.பி முனுசாமி அதிமுக பொதுக்குழுவில் விளக்கம் அளித்தார்.

    Must Read : மூத்த தலைவர்களை சமாதானம் செய்யாமல் நீதிமன்றத்தை நாடுவதா? ஓபிஎஸ் மீது நீதிமன்றம் காட்டம்

    இந்நிலையில், ஓபிஎஸ் பொருளாளர் பொறுப்பு, கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க தீர்மானிக்கப்படுகிறது என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரும் நீக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, EPS, O Pannerselvam, OPS

    அடுத்த செய்தி