கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில்
திமுக மற்றும்
அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனால், வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
அங்கே, ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜைகளில் அட்டவணை வரிசைப்படி பெட்டிகளை அமைக்கவில்லை என திமுகவினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில், ஏற்கனவே ஒதுக்கப்பட்டது போல் வரிசைப்படி பெட்டிகளை அமைக்க வேண்டும் என அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் பணி தாமதமானது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடந்து வரும் பாளையங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு என்னும் மையத்தில் சி.சி.டி. கேமரா நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் காண உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி 9 மையங்களில் நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கியது தற்போது வாக்குப் பெட்டி வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குமூலம் பகுதிக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
பாளையங்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான ரோஸ் மேரி கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணும் பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நெல்லை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் பணி அமைதியான முறையில் நடந்து வருகிறது.
Must Read : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 முடிவுகள் நேரலை
ஒவ்வொரு மையத்திற்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் ஒரு மையத்திற்கு 7 பேர் மீதும் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இதேபோல ஆங்காங்கே உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.