Home /News /tamil-nadu /

முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. பயணிகள் வாக்குவாதம் - செங்கல்பட்டில் 1 மணிநேரம் நிறுத்தப்பட்ட ரயில்

முன்பதிவு பெட்டிகளில் ஏறி வடமாநிலத்தவர்கள் அட்டகாசம்.. பயணிகள் வாக்குவாதம் - செங்கல்பட்டில் 1 மணிநேரம் நிறுத்தப்பட்ட ரயில்

பயணிகள் வாக்குவாதம்

பயணிகள் வாக்குவாதம்

Chengalpattu : செங்கல்பட்டில் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் அட்டகாசம் செய்ததால், பயணிகள் ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 1 மணி நேரம்  தாமதமாக புறப்பட்டு  சென்றது கன்னியாகுமரி அதிவிரைவு  ரயில்.

    கொல்கத்தாவில் இருந்து  கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயிலில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் வந்த நிலையில் முனபதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு பதிலாக, அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்துள்ளனர். அந்த ரயில் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தபோது பயணிகள் பில்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.

    அதன்படி, கன்னியாகுமரி வரை செல்லும் வாராந்திர சிறப்பு இரயிலில் முனபதிவு செய்த பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
    முன்பதிவு செய்தவர்கள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த நிலையிலும் வடமாநிலத்தவர்கள், தமிழர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது அதிகமாக பெண்கள் பயணித்த பெட்டிகளில் அரைகுறை ஆடைகளுடன் வடமாநிலத்தவர்கள் பயணித்த நிலையில் பெண்கள்  மூன்று முறை ரயிலை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்காக நிறுத்தபட்ட நிலையில், ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்கள் குழந்தைகள் என முன்பதிவு செய்து செல்லும் ரயில்களில் முறையான பயணசீட்டு இன்றி அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் பயணம் செய்வதால் பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தனர்.

    இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் என யாரும் கழிவறைக்கு செல்லமுடியாமல் அவதிபட்டு வருவதாக கூறி குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பல முறை இந்த சம்பவங்கள் குறித்து தகவல் தெரவிக்க அவசர எண்ணை பயன்படுத்தியும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை எனவும் கூறினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக செங்கல்பட்டு ரயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்ட பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயிலில் ஏறிய வடமாநிலத்தவர்கள் ஒருவர் கூட முறையான டிக்கெட் பெறாமல் முன்பதிவு பெட்டிகளில் ஏறி அராஜத்தில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த இரயில்வே மற்றும் செங்கல்பட்டு நகர போலீசார் முன்பதிவு பெட்டிகளில் இருந்த வடமாநிலத்தவர்களை இறக்கி வேறு இரயில்களில் அனுப்பி வைத்தனர்.

    Must Read : இந்தியாவின் பொருளாதார நடவடிக்கையினால் வருவாய் உயரவில்லை - ஆனந்த் ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

    தமிழகத்தில் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் வேலைக்கு வரும் நிலையில். முன்பதிவு பெட்டிகளில் ஏறி  அமர்த்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது என இரயில் பயணிகள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றது.

    செய்தியாளர் - ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு
    Published by:Suresh V
    First published:

    Tags: Chengalpattu, Railway Station, Tamil News

    அடுத்த செய்தி