ப.சிதம்பரத்திற்கும் கட்சி நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம்... காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு

ப.சிதம்பரம்

வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • Share this:
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் கட்சி நிர்வாகிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு, மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியடையவில்லை என்றும் கட்சி கூட்டத்திற்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை என்றும் சாடினார். அதன்பிறகு மற்றொரு நிர்வாகி பேச முற்பட்டபோது, பாண்டி வேலு பேச்சை தொடர்ந்தார். கட்சி நிர்வாகிகள் அனைவரையும் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    ஆனால், அமைதி காக்கும்படி பாண்டிவேலுவை ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த பாண்டி வேலு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 20 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வரும் தன்னை பேச அனுமதிக்க மறுப்பதா என்று ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

    Also Read : தமிழகத்தில் பிரபல நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு... ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

    ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த ப.சிதம்பரம் மேடையில் இருந்து இறங்கி வந்து, பாண்டி வேலுவிடம் மேடையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டு பேசும்படி அறிவுறுத்தினார். இருப்பினும் பாண்டி வேலு நாற்காலியை தூக்கி எறிந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் கட்சி நிர்வாகிகள் பாண்டி வேலுவை சமாதானப்படுத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: