• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்... விரைவில் அரசாணை - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்... விரைவில் அரசாணை - அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடியும் வரை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கை இருக்காது.

  • Share this:
    கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் இறுதி செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் கரூரில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    கரூரை அடுத்த வெள்ளியணை பகுதியில் திமுக சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளரும்,  அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்து கொண்டு பணிமனையினை திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வெள்ளியணை கடைவீதியில் நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்திற்கு அரசு வேளாண்மை கல்லூரி, கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் இந்த 8 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரவில்லை என பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் 8 ஊராட்சிகளில் 10 கோடியே 71 லட்சம் மதிப்பில் சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இன்னும் பல்வேறு பணிகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் முடிந்த பின்னர் விரைவில் நிலுவையிலுள்ள பணிகள் நிறைவேற்றப்படும்.
    ஊராட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடியும் வரை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கை இருக்காது. மேலும், வெள்ளியணை பகுதியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை.

    Must Read : 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் இறுதி செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறினார்.

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: